நாமக்கல் மாவட்டம் உத்திரகிடி காவல் ஊராட்சியில் மலை வேப்பன்குட்டையில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. அதன் அருகில் ராசிபுரம் மெயின் ரோட்டிற்கு செல்லும் சாலை மேடும் பள்ளமாக உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நாராயணன், மலைவேப்பன் குட்டை, நாமக்கல்.