ஓசூர் 5-வது வார்டுக்கு உட்பட்ட ஆனந்தாநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் நாள்தோறும் புதிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு இந்த பகுதி விரிவடைந்து வருகிறது. இங்குள்ள சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகின்றன. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குணசேகர், ஓசூர்