சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-24 13:16 GMT

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு போஸ்டல் காலனி முதல் குறுக்கு தெருவில் சாலை பராமரிப்பின்றி உள்ளது. சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலை வழியாக சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்


மேலும் செய்திகள்