கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முதல் வெங்கடதாம்பட்டி புதூர் வரை செல்லும் தார்சலை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், கிருஷ்ணகிரி.