செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4, வார்டு 56 புது பெருங்களத்தூர்க்கு உட்பட்ட தை மூகாம்பிகை நகர் முதன்மை சாலை பல ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மக்கள் வாகனங்களில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக் காலத்தில் பள்ளம் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய சாலையை அமைத்து தரவேண்டும்.