தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2023-09-20 14:10 GMT


நாகை மாவட்டம் வாழக்கரை பாலத்தில் இருந்து ஏர்வைக்காடு செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றன. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர  வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்