சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-20 14:07 GMT

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் ராஜீவ் நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை கால்வாயை சுற்றிலும் கற்கள் பெயர்ந்து சாலை சாலை குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றன. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்