நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பீச்ரோடு பகுதியில் வலம்புரி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கின் எதிரே செல்லும் சாலையின் தொடக்கத்தில் மழைநீர் வடிகால் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகாா்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பகுதியை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
-ஆன்றோ டெகோசிங் ராஜன். வேதநகர்.