நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஹென்றிசாலையில் பாதாளசாக்கடைக்காக போடப்பட்ட மூடி சேதமடைந்து காண்பபட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மூடியை அகற்றி விட்டு புதிய மூடியை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-ஆன்றோ டெகோ சிங்ராஜன், நாகர்கோவில்.