ஏரிப்பாதை ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்

Update: 2025-04-27 20:40 GMT

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனந்தலை, செங்காடு மோட்டூர், வள்ளுவம்பாக்கம், படியம்பாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரிக்கு செல்லும் பிரதான வழியை சிலர் ஆக்கிரமித்து, கட்டுமானப் பணிகளை செய்ய முயன்று வருகின்றனர். இதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

-குப்புசாமி, அம்மூர்.

மேலும் செய்திகள்