கண்ணமங்கலம் முதல் படவேடு வரை உள்ள சாலையை ஓ.டி.ஆர். என்பதை எம்.டி.ஆர். எனத் தரம் உயர்த்த வேண்டும் எனப் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து படவேடு, அனந்தபுரம், காலசமுத்திரம், குப்பம், கொளத்தூர் உள்பட 50 கிராமங்கள் பயன் அடையும் வகையில் இருவழிச்சாலையாக அமைக்க வேண்டும்.
-குமார், படவேடு.