போளூர் தாலுகா ஓகூர் கிராமம் கொல்லைமேட்டு பகுதியில் 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். கொல்லைமேடு பகுதிக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை. நீண்ட காலமாக மண் பாதைகளாக உள்ளது. மண் பாதையை தார் சாலையாக மாற்ற மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், போளூர்.