சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-12-14 10:47 GMT

வேலூர் ஓட்டேரியில் அரசு கலைக் கல்லூரி, தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. அங்குள்ள சாலை போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையாகும். அந்தச் சாலையில் வெகுதூரம் பள்ளங்களும், சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவில் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஓட்டேரி சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்