ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பாணாவரம், நெமிலி ரோடு வழியாக இரவில் லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகளை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் ஜல்லிக்கற்களை எடுத்துச் செல்வதால் பாணாவரத்தில் இருந்து கூத்தம்பாக்கம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் கொட்டிக்கிடக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக பின்பற்றாத லாரிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஷ்ணு, வீரராகவபுரம்.