திருப்பத்தூர் பாச்சல் மேம்பாலத்தின் அருகில் செல்லும் சர்வீஸ் சாலையில் இருந்து பசுமை நகர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலை போல் காட்சியளிக்கிறது. வாகனங்களின் டயர் கல்லடிப்படுகிறது. நடந்து செல்வோரின் கால்களை கற்கள் பதம் பார்க்கின்றன. சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஞானசேகரன், திருப்பத்தூர்.