சோளிங்கரை அடுத்த கீழாண்டமோட்டூர் மெயின் ரோட்டில் இருந்து பாண்டியநல்லூர் காலனி வழியாக சோளிங்கர், அரக்கோணம் மெயின் ரோடுவரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைத்து சில ஆண்டுகளே ஆகின்றன. அந்தத் தார் சாலை பல இடங்களில் சேதம் அடைந்து குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் ராட்சத பள்ளம் காணப்படுகிறது. அதை கடக்க வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனா். ஒருசில இடங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. அந்தத் தார் சாலைைய தரமான சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எபினேசன், பாண்டியநல்லூர்.