திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே அரசின் நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி எதிரே குப்பை குவியல் உள்ளது. குப்பைகளை பாலித்தீன் கோணிப்பையில் கொண்டு வந்து குவித்துள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுதாகர், திருப்பத்தூர்.