சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-10-04 16:44 GMT

திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையம் அருகே காதர் மொய்தீன் தெருவுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையோரம் ஆழ்துைள கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அந்த இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இந்தச் சாலையில் செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும், ஆழ்துளை கிணறு அடிபம்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், திருப்பத்தூா்.

மேலும் செய்திகள்