தெருநாய்களால் தொல்லை

Update: 2022-12-21 18:11 GMT

தெருநாய்களால் தொல்லை

சேவூரில் ராஜவீதி, வடக்கு வீதி, ஏரிமேடு, மாரியம்மன் கோவில் வீதி, கோபி சாலை, புளியம்பட்டிசாலை, குன்னத்தூர் சாலை, ஆகிய பகுதியில் குடியிருப்போர், மற்ற பகுதியில் இருந்து வருபவர்கள் என சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் இப்பகுதிக்கு தினசரி வந்து செல்கின்றனர். அதே போல் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதி கோபி, அந்தியூர், சத்தி, புளியம்பட்டி, குன்னத்தூர், அவினாசி, திருப்பூர் செல்லும் சாலைகளை இணைக்கும் பகுதியாகும். இங்கு தினசரி சாலைகளில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. மோட்டார் சைக்கிளில் வருபவர்களை தெரு நாய்கள் துரத்தியும், இருசக்கர வாகனத்தின் மீது மோதியும் பெரும் விபத்து எற்பட்டு வாகன ஓட்டிகள் படுகாயமடைகிறார்கள். நடந்து செல்லும் பாதசாரிகளை துரத்தி கடித்தும் விடுகிறது. நள்ளிரவு நேரங்களில் வீடுகள் முன்பு தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து சத்தம் இடுவதால் பொதுமக்கள் உறங்க முடியவில்லை என பலர் தெரிவித்தனர். இதனால் இப்பகுதியில் இருப்பவர்கள், வருபவர்கள் பாதிப்படைகிறார்கள். எனவே இப்பகுதியில் உள்ள தெரு நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும்.

ஆனந்தன், சேவூர்.

மேலும் செய்திகள்