ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஆக்கிரமித்துக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது, விபத்துகளும் நடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறையினரும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரீஸ், பூட்டுத்தாக்கு.