வேலூர்-ஆரணி சாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகியுள்ளது. மேலும் அதில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் இரவில் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.