வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள ஜவுளிக்கடை அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் கொண்டு மூடப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சிலாப் உடைந்து இரும்பு கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே தெரிகிறது. இரவில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெத்தினம், வேலூர்.