வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியில் கெங்கையம்மன் கோவில், சிறிய காய்கறி மார்க்கெட், மருந்தகங்கள் மற்றும் ஓட்டல்கள், பல கடைகள் உள்ளன. இங்கு பஸ் நிறுத்தம் உள்ளது. பேஸ்-2 வில் உள்ள மடம் தெரு, தஸ்தகிரி தெரு, கானாறு தெரு ஆகிய தெருக்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள், முதியோர், வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூமிநாதன், வேலூர்.