ஓடை நீர் செல்ல சாலை துண்டிப்பு

Update: 2022-09-08 11:36 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா பெரியாண்டவர் கோவில் அருகே சரஸ்வதி ஆற்றின் துணை ஆறு உள்ள பகுதியில் ஓடை ஆற்றுப் பகுதியில் தார் சாலை உள்ளது. இந்தத் தார் சாலை வெள்ளநாய்க்கனேரி பகுதிக்கு செல்கிறது. இந்தச் சாலையில் தினமும் நூற்றுக்காணக்கான மக்கள் சென்று வருகிறார்கள். இந்தத் தார் சாலை, பெரியாண்டவர் கோவில் அருகே ஓடை நீர் செல்ல தடையாக உள்ளதால், சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சி.சம்பத்து சமூக ஆர்வலர், நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்