வேலூரை அடுத்த ரங்காபுரம் மாதா கோவில் தெரு செல்லும் வழியில் கனரக வாகனங்கள் செல்வதால் கால்வாய் சிமெண்டு சிலாப் சேதம் அடைந்துள்ளது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. பழுதான சிமெண்டு சிலாப்களை மாற்றி விட்டு புதிதாக கனமான சிமெண்டு சிலாப்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண்குமார், ரங்காபுரம்.