திருவண்ணாமலை-வேலூர் சாலையில் வேங்கிக்கால் பூமாலை வளாகம் எதிரில் மின்நகர் 5-வது தெரு இணைப்புப் பகுதியில் சாலை பழுதடைந்துள்ளது. நடந்து செல்லும் முதியோர், சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் சாலையின் இணைப்பு பகுதியை சிமெண்டு சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.சின்னதுரை, திருவண்ணாமலை.