வாலாஜாவில் அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. அங்குள்ள மரங்களின் கீழே தற்காலிக கடைகள் உள்ளன. மறைவிடங்களை பயன்படுத்தி அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. மெயின் கேட் அருகே கடைக்காரர்களால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிழற்குடை எதிரே போடப்பட்ட சிமெண்டு சாலையை பெயர்த்தெடுத்துள்ளனர். இதை, கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.ராஜவேலு, வாலாஜா.