சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் 150-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்தக் கிராமத்துக்கு ெசல்ல 15 ஆண்டுக்கு முன் சிமெண்டு சாலை போடப்பட்டது. அந்தச் சிமெண்டு சாலை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் கிராமத்துக்கு சென்று வர மக்கள் வர சிரமப்படுகிறார்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, கல்பட்டு.