கண்ணமங்கலம் பேரூராட்சியில் அனைத்துத் தெருக்களிலும் கடந்த சில மாதங்களாக அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.2.47 கோடியில் வீட்டுக்கு வீடு குடிநீர் வினியோகிக்க குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி நீண்ட காலமாக நடந்து வருவதால் தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடப்படவில்லை. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமமாக உள்ளது. பணியை விரைந்து முடித்து அனைத்துத் தெருக்களிலும் புதிய சிமெண்டு சாலை அல்லது தார் சாலை அமைக்க வேண்டும்.
-சேட்டு, கண்ணமங்கலம்.