குண்டும் குழியுமான சாலைகள்

Update: 2023-01-18 12:41 GMT

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடமாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பாலாஜி நகர், ராஜகோபாலாபுரம் ஆகிய பகுதியில் சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்து சாலை வரை நீண்டுள்ளது. மேலும் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையோரம் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும்.

-கோபிநாத், பாலாஜி நகர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்