திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்தச் சாலையில் தினமும் ஏராளமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் தடுமாறி கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆல்பர்ட், திருவண்ணாமலை