குண்டும் குழியுமான சாலை

Update: 2024-10-13 20:47 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து பச்சூர், கொத்தூர், ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலை உள்ளது. இந்தச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழைப் பெய்து வருவதால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையைச் சீரமைத்துத்தர வேண்டும்.

-சிவக்குமார், பச்சூர் டோல்கேட்.

மேலும் செய்திகள்