திருப்பத்தூர் அருகே ஜலகாம்பாறையை அடுத்த ஜடையனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து கிராமத்துக்கு செல்லும் சாலையும், ஜடையனூர் கிராமத்தில் இருந்து பெருமாப்பட்டு செல்லும் சாலையும் போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. தற்போது சாலைகள் மண் சாலை போல் காட்சி அளிக்கின்றன. சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலன், திருப்பத்தூர்.