சோளிங்கர்-அரக்கோணம் மார்க்கத்தில் சாலை கிராமம் உள்ளது. அங்கிருந்து குருவராஜப்பேட்டை ரோட்டில் இருந்து சித்தாம்பாடி செல்லும் பிரதான சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வயல்களுக்கு உரம், பூச்சி கொல்லி மருந்துகளை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் தார் ஊற்றி சீரமைக்க வேண்டும்.
-ராமன், குருவராஜப்பேட்டை.