அரக்கோணம் மங்கமாபேட்டையில் உள்ள பெரியசாமி நகர் செல்லும் அண்ணா தெரு, திருத்தணி சாலையில் இருந்து ராஜகோபாலபுரம் ரோடு வழியே நாகாலம்மன் நகருக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வயதானவர்கள், பள்ளி சிறுவர், சிறுமிகள், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
-சுரேந்தர், அரக்கோணம்.