ராணிப்பேட்டையில் பிஞ்சி எல்.எப்.சாலையில் இருந்து பை-பாஸ் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருக்கிறது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்காக நடந்தும், வாகனங்களிலும் செல்கின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் செல்கின்றனர். சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் விபத்துகளும் ஏற்படுகிறது. சில நேரத்தில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து எழுந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த இச்சாலையை சரி செய்து விபத்துகளை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.தன்வந்த்கிருஷ்ணா, ராணிப்பேட்டை.