ஜோலார்பேட்டையை அடுத்த டி.வீரப்பள்ளி பகுதியில் நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் குடியானகுப்பம் பகுதிக்கு செல்லும் கூட்ரோடு சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல முறை தகவல் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்வார்களா?
-இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.