ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியில் அம்மையப்பன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து தற்போது குண்டு குழியுமாக மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜமுனா இளவரசன், ஊராட்சி மன்ற தலைவர் அம்மையப்பன் நகர்.