ஜோலார்பேட்டை அருகே ஆஞ்சநேயர் கோவில் எதிரில் சின்னா கவுண்டனூர் பகுதிக்கு செல்லும் சாலை குண்டு குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவ- மாணவிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டு குழியுமாக உள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டும்.
-த.வீரமணி, ரெட்டியூர்.