திருப்பத்தூர் அருகே பெரியகரம் ஊராட்சியில் உள்ள புதூர் பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாகவும், கரடுமுரடாகவும் உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் சாலையை சீரமைக்க வில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.
ஜனா, திருப்பத்தூர்