குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-23 11:32 GMT

ஆரணியை அடுத்த காமக்கூரில் இருந்து சம்புவராயநல்லூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மினிபஸ்கள் திடீரென நிறுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். மழை பெய்தால் பள்ளமாக உள்ள இடத்தில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலை மைத்துத் தருவார்களா?

பொதுமக்கள், சம்புவராயநல்லூர்

மேலும் செய்திகள்