திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் 7 -வது தெரு பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்தச் சாலை வழியாக தான் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும், அலுவலகப் பணிக்களுக்கும் தினமும் மக்கள் சென்று வருகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலையின் வழியாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மழைக் காலங்களில் இந்தச் சாலையில் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை சரி செய்து தர வேண்டும்.
-முருகன், திருவண்ணாமலை.