வேலூர் வடக்கு காவல் நிலையம் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேல் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அம்பேத்கர் சிலை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் சிமெண்டு சிலாப் பெரிய அளவில் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த சிமெண்டு சிலாப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜன், வேலூர்.