பாலம் சேதம்

Update: 2023-03-19 17:04 GMT

நாட்டறம்பள்ளி அருகே சண்டியூர் கிராமத்தில் ஆற்றின் குறுக்கே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது. அந்த வழியாக கத்தாரி, மல்லகுண்டா, தாசியப்பனூர் உள்ளிட்ட கிராம மக்கள் சென்று வந்தனர். கடந்த ஆண்டு பெய்து கனமழையால் தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த பாலத்தை சீர் செய்வார்களா?

-இல. குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர். நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்