திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு கிராமப் பகுதியில் இருந்து நகராட்சி பகுதியில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், திருமால் நகர் குள்ளதாச்சாரி வட்டம், குடியரசு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. உடனடியாக நகராட்சி பகுதிகளில் இணைத்து பாதாள சாக்கடை, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-மு.வெற்றி கொண்டான், நகராட்சி கவுன்சிலர், திருப்பத்தூர்.