வெங்களாபுரத்தில் இருந்து ராச்சமங்களம் செல்லும் பாதையில் 3 கிேலா மீட்டர் தூரத்துக்கு சாலை அகலம் சிறியதாகவும், பழுதடைந்தும் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். டவுன் பஸ்கள் இந்தச் சாலையில் போகும் போது எதிரே எந்த வாகனம் வந்தாலும் ஒதுங்கி மாறி செல்ல முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைத்து, அகலப்படுத்த வேண்டும். இந்தச் சாலையின் ஓரம் வயல் வெளியில் தடுப்புச்சுவரும் இல்லாமல் ஒரு பெரிய நீர் கிணறு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.சா.நிரூபன், ராச்சமங்களம், திருப்பத்தூர்.