வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாயின் மேற்பகுதியில் உள்ள கான்கிரீட் சிலாப் உடைந்து விழுந்தது. அது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்து கிடந்த சிமெண்டு சிலாப் பள்ளத்தை சரி செய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
-மாலன், வேலூர்.