பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை

Update: 2023-04-23 16:22 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சி கோடியூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் 70 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஒரு பாதையை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்று வரும் நிலை உள்ளது. மேலும் அந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்தக் கட்டிடங்களும் கட்டினால் மக்கள் நடந்து செல்ல பாதையே இல்லாமல் போய்விடும். ஆக்கிரமிப்பை அகற்றி பாதை வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன் கோவிந்தராஜ், சமூக ஆர்வலர், சிம்மணபுதூர். 

மேலும் செய்திகள்