கே.வி.குப்பம் பஸ் நிலையம்-சந்தைமேடு இடையே காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அப்பகுதிகள் அகலமாகக் காணப்படுகிறது. இதன் ஓரங்களில் நாள் முழுவதும் கனரக வாகனங்களை நிறுத்தும் இடமாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலைகளில் நெரிசல், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கரியமால், கே.வி.குப்பம்.