வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடந்து வருகிறது. சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடக்கிறது. கிருஷ்ணகிரி மெயின் ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளம் அருகே சாலையில் ஒரு திருப்பம் உள்ளது. அந்தத் திருப்பத்தில் வாகனங்கள் வந்து திரும்புகின்றன. அதன் அருகில் பெரிய பள்ளத்தில் கருங்கல்லை வைத்துள்ளனர். இரவில் வெளிச்சல் இல்லாத அந்த இடம் வழியாக வாகனங்களில் வருவோர் கருங்கல்லில் மோதி விபத்தில் சிக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தக் கருங்கல் அகற்றி பள்ளத்தை மூட வேண்டும்.
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.